Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி வீரப்பா என்பவர், நேற்று (13) சடலாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவரின் அயலவரின் வீட்டின் வாசலில் நின்ற மரத்தின் கீழ் உறங்கிய நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் நித்திரை விட்டு எழுந்திருக்கவில்லை. அவரை அருகில் சென்று எழுப்பியபோது அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேஸதாஸால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளை, வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago