Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பில் சமீபத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபரால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் தமது திட்டவரைவைச் சமர்ப்பித்துள்ளதாக, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரனிடம் சம்மேளன உறுப்பினர்களால் நேற்று கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தன்னகத்தே கொண்டுள்ள 198 பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்களையும் உள்ளடக்கி, பிரதேச அரசியல்வாதிகளினதும் துறைசார்ந்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்று, இந்த திட்டவரைவைச் சமர்ப்பித்துள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
காத்தான்குடி எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக 10 வட்டாரங்களைக் கொண்ட காத்தான்குடி மாநகர சபை ஒன்றையும், மேலும் 10 வட்டாரங்களைக் கொண்ட பிரதேச சபை ஒன்றையும், ஸ்தாபித்தல் தொடர்பாக சகல தரவுகளையும் கொண்ட திட்டவரைவு, சம்மேளனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago