2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மே 03 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் கொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக  இடம்பெற்ற இந்த போராட்டத்துக்கு  சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வி.கிருஸ்ணகுமார், 'இந்த நாட்டில் கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட, நாட்டை விட்டு வெளியேறிய, அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை அமைக்குமாறு நாங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்றார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X