2025 மே 24, சனிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம்

எஸ். பாக்கியநாதன்   / 2017 ஜூலை 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X