2025 மே 09, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி ஆற்றங்கரை மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆற்றங்கரையோரத்தை அண்டியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு  உதவி அளிப்பதுடன், ஆற்றங்கரையோரத்தில் கைவிடப்பட்டுள்ள மிதப்புப்பாதையை சீர்ப்படுத்தித் தருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி மக்கள் மற்றும் மீனவர்களினதும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் காத்தான்குடி பிரதேச சூறாசபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.ஹில்மி இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

காத்தான்குடியிலுள்ள பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருந்தொகை நிதி செலவு செய்யப்பட்டு திருகோணமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த மிதப்புப்பாதை ஆற்றுவழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுமென்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்; மேலதிக தொகை செலவு செய்யப்பட்டு மிதக்கும் உணவகமாக காத்தான்குடியின் முன்னாள் நகரசபை நிர்வாகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது இம்மிதப்புப்பாதை சேதமடைந்த நிலையில்  ஆற்றங்கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றமை தொடர்பிலும் இவர்களிடம் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X