2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குழு மோதல்: மூவர் காயம்; இருவர் கைது

Princiya Dixci   / 2017 மார்ச் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையே நேற்று (10) மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் நேற்று மாலை தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டமொன்று நடைபெறவிருந்த நிலையிலேயே, இந்த குழு மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில் வாள்வெட்டு மற்றும் கல் வீச்சுக்களினால் இரு குழுக்களிலிருந்தும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அதில் வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கல்வீச்சினால் காயமடைந்த இருவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் தெரியவருகின்றது.

சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவ இடத்தில் பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் நடைபெறவிருந்த மார்க்கப் பிரசாரக் கூட்டத்தை இடை நிறுத்துமாறு, பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரசாரக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .