2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாணம் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றது'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 'கிழக்கு மாகாணம் சுற்றுலாப் பயணிகளை கவரும் மாகாணமாக உள்ளது. அந்த வகையில், இம்மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம்' என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சகல வளங்களையும் கொண்டதாகக் கிழக்கு மாகாணம் திகழ்கின்றது எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஈஸ்ட்லகூன் ஹோட்டலில் இன்று (8) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'அவுஸ்திரேலிய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் இருந்துவரும் சரித்திரம் வாய்ந்த இரு தரப்பு உறவுக்கு எடுத்துக்காட்டாக அவுஸ்திரேலியாவின் சுற்றுலாத்துறைக்கான உதவி அமைகின்றது' என்றார்.  
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X