Princiya Dixci / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்கமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடிகளை வளர்த்த 30 வயது நபரொருவரை, நேற்று (18) மாலை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டின் காணியிலிருந்து 4 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நபர், வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டின் காணியை சோதனைக்குட்படுத்தியபோதே கஞ்சா செடிகள் நடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Feb 2026