2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா பக்கெட்டுகளுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 மே 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா பக்கெட்டுகளுடன் இளைஞன் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணியில் கேரளா கஞ்சா பக்கெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் கீழ், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், நேற்று (15) மாலை மேற்படி இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, இளைஞனிடமிருந்து 58கேரளா கஞ்சா பக்கெட்டுகளும் 2,350 ரூபாய் பணமும் அலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X