2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவர்கள்

Freelancer   / 2022 ஜனவரி 15 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் நேற்று கடலில் நீராடிக் கொண்டிருந்த போது இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதில், கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜினன் (வயது 16), ச.அஸ்வன் (வயது 16) ஆகிய இரு சிறுவர்களும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடலில் நீராடிய மற்றுமொரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X