Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கல்லடியை அண்மித்த வங்காளக் கடலில் 2ஆம் உலக யுத்தத்தில் மூழ்கிக் கிடந்த கப்பலின் பாகங்களை அகற்றித் தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூவரையும், நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று(16) உத்தரவிட்டுள்ளார்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவரும் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, மேற்படி மூவரும் வெள்ளிக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கப்பலின் துருப்பிடித்த பாகங்கள், சுழியோட்டத்துக்காக சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்ட பிராண வாயு சிலிண்டர்கள் (ஒட்சிசன் சிலிண்டர்ஸ்) நீச்சல் உடைகள், உட்பட இன்னும் பல பொருள்களையும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பிக்கப் வாகனம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நீர்கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு கல்லடிப் பகுதிக்கு வந்து தங்கியிருந்துள்ளனர் என்பது, பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து
5 minute ago
38 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
38 minute ago
6 hours ago