Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 16 , மு.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பாறை பிரதான வீதியில், பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரியசக்தி மின்குமிழ் கம்பத்தை அறுத்து, மின்குமிழ்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து அறிந்து இடத்துக்கு வருகைதந்த அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ றாஸிக் கருத்துத்தெரிவிக்கையில், இந்த இடங்களில் யானைக் கூட்டங்களின் வருகையும் பிரயாணம் செய்கின்ற பொதுமக்களின் அசௌகரியமும் இரவு நேரங்களில் வேலை செய்கின்ற விவசாயிகளின் அத்தியாவசிய தேவையும் கருதி, பெறுமதி வாய்ந்த சூரிய சக்தியில்
இயங்குகின்ற மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை, பெரிய இரும்புக் குழாயினை அறுத்து சாய்த்து விட்டு, அதில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தி மின்விளக்கை திருடியுள்ளார்கள்.
இவ்வகையான தொடர் செயற்பாடுகள் நீடிக்குமாக இருந்தால், தண்டனை பெற்றுத் தரும் வகையில் பிரதேச சபையும் பொதுமக்களும் செயற்படுவார்கள் என்றார். R
20 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago