Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை மாநகர சபையை, ஊழலற்ற சபையாக மாற்ற வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பாக, கல்முனை மாநகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம், மருதமுனை இமாம் கஸ்ஸாலி வீதியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஒரேயொரு கட்சி, மக்கள் விடுதலை முன்னணியாகும்.
“கல்முனை மாநகர சபை, தற்போது ஊழல் நிறைந்த இடமாகக் காணப்படுகின்றது. இதனால்தான் இங்குள்ள குப்பைகளைக் கூட சரியாக அள்ளமுடியாமலும் தெருவிளக்குகளைப் போட முடியாமலும் உள்ளன.
“பிணை முறி மோசடி செய்யப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றால், கல்முனை மாநகர சபை எல்லைக்குள் உள்ள அனைத்து வீதிகளையும் காபட் வீதியாக அபிவிருத்தி செய்ய முடியும்.
“முஸ்லிம் தலைவா்கள், முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பதில்லை. பேரீச்சம் பழத்துக்கு வரி அறவிட்ட போது, நாம்தான் முதலில் அதற்கெதிராகக் குரல் கொடுத்தோம். நாம் கலாசார அமைச்சராக இருக்கும் போதுதான், முஸ்லிம்கள் பர்தா அணிய அனுமதி வழங்கினோம்.
“ஆகவே, 2020 ஆண்டு இன, மத, மொழி கடந்த ஊழலற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஆட்சியை அமைக்க எல்லோரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .