2025 மே 07, புதன்கிழமை

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்றம் அங்குரார்ப்பணம்

Freelancer   / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் 

கிண்ணியா சுற்றுலா நீதிமன்றம், நீதிபதி பயாஸ் ராசாக்கினால் வியாழக்கிழமை (01) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  

கிண்ணியா துறையடியில் அமைந்துள்ள, கிண்ணியா  நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றவியல் (நீதிவான் நீதிமன்றத்துக்கு உட்பட்ட ) வழக்குகள் அனைத்தும் இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதுடன், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும்  வழக்கு விசாரணைகள்  நடைபெறும்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச்.எம்.கனி, கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணிகள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X