Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 29 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர். ஜெயஸ்ரீராம், வடிவேல் சக்திவேல், பைஷல் இஸ்மாயில், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முழுமையான நடவடிக்கை எடுக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“இலங்கையில், கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியமான இடமாகும். இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த கிழக்கு மாகாண சபைக்கு, மத்திய அரசாங்கம் உதவி செய்யும்.
“யுத்தத்துக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து வருகின்றோம். அதில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும்.
“சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம், இங்குள்ள தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உள்;ர் உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பும் கிராக்கியும் ஏற்படும்.
“இது தொடர்பாக இங்குள்ள அதிகாரிகளிடம் திட்ட அறிக்கையைக் கோரியுள்ளதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,
“சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். முக்கிய முதலீட்டாளர்களை, கிழக்கு மாகாணத்துக்கு அழைத்து வந்து, சுற்றுலா முக்கியத்துவம் மிக்க இடங்களில் முதலீடுகளை முன்னெடுத்து, அதன்மூலம் கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.
“அத்துடன், கிழக்கு மாகாணத்திலும் விமான சேவையை விஸ்தரிப்பது தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதுடன், மாகாணத்தின் வீதிக்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம்.
“மத்தளை தொடக்கம் அம்பாறை வரையான பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில்வாய்ப்புகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம்,
“கப்பல்துறையில் கைத்தொழில் வலயமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் கிழக்கில் தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பிரதமரிடம் கையளிக்கவுள்ளோம்” என்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago