Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 29 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன், கே.எல்.ரி.யுதாஜித்
புதிதாகப் பதவியேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம, மட்டக்களப்பு, புளியந்தீவு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு நேற்று (28) விஜயம் செய்தார்.
புளியந்தீவு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பையேற்று, தனது பதவியைப் பொறுப்பேற்ற பின்பு முதன்முதலாக குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலையின் அபிவிருத்திகள் பற்றிக் கலந்துரையாடினார்.
பாடசாலையின அதிபர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், குறித்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துதல், பாடசாலைக்கு குறுக்காக இருக்கும் வீதியை நிரந்தரமாக மூடுதல், பௌதீக மற்றும் ஆளணி பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட்டின் நினைவுப்படிகம் இருக்கும் மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் பெற்றுத்தருமாறு கோரிய விடயங்கள் எழுத்து மூலமாக ஆளுநரிடம் கையளித்தபோது, அவற்றை வாசித்து அவற்றைப் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) எஸ்.கோவிந்தராஜா, பழைய மாணவர் சங்கத் தலைவர் எஸ்.சசிதரன், பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் பொறியியலாளர் டீ.ஏ. பிரகாஷ், பொறியியலாளர் வை. கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆளுநர், பாடசலையில் வைக்கப்பட்டுள்ள விருந்தினர்களின் வரவுகள் மற்றும் எண்ணங்களைப் பதிவிடும் புத்தகத்திலும் பதிவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago