2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; விவசாயிகள் கவனயீர்ப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான், சந்தனமடு ஆறுப் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை, இன்று (17) காலை முன்னெடுத்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவனயிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர் நோக்குக்கின்றனர். வீதி மோசமாக சேதமடைத்ல, ஆறு அகலமாக்கப்படுத்தல் , வெள்ள நீரால் பாதிப்பு, உள்ளக மணல் வளத்தைப் பயன்படுத்த முடியாமை உள்ளிட்ட பல விதமான சவால்களுக்கு, மக்கள் முகங்கொடுக்கின்றனர்.

குறித்த பகுதியில் மணல் அகழ்விற்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் தடை விதித்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X