Menaka Mookandi / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாகவே பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் சாதிக்க முடியும் என பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
'ஏறாவூர் நகர, பிரதேச செயலகப் பிரிவில் வாழ்கின்ற சிறியோர் தொடக்கம் முதியோர் வரை அத்தனை பிரஜைகளுக்கும் முழுமையான சேவையை ஏறாவூர் நகர பிரதேச செயலகம் வழங்கி வருகின்றது என்பதில் தான் பெருமையடைகின்றேன்' என்றும் அவர் கூறினார்.
'ஏறாவூரில் வறுமை என்பது சற்று அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தியின் ஊடாகவே இந்த வறுமைக்குப் பரிகாரம் தேட முடியும்.
இப்பொழுது ஏறாவூர் மக்கள் எதிர்நோக்குகின்ற பெரிய சவால் கல்வியாகும். இங்குள்ள மாணவர்களில் 20 சதவீதமானோர் மாத்திரமே உயர்கல்வி நிலையை அடைகின்றனர். ஏனையோர் உயர்க் கல்வியை அடைவதற்கு முன்னதாகவே தமது கல்வியை கைவிட்டு விட்டு, வேறு விடயங்களில் கவனஞ் செலுத்துகின்ற போக்கு அதிகரித்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் அக்கறை செலுத்த வேண்டும்.
சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாகத்தான் பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் சாதிக்க முடியும் என அரசின் புதிய கொள்கைகள் வலியுறுத்துகின்றன. அதனையே இந்தப் பிரதேச செயலகம் அமுல்படுத்திக் காட்டவுள்ளது' என்று ஹனீபா மேலும் கூறினார்.
5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago