எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 01 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள 16ஆம் வட்டாரத்தில் சமுர்த்தி சங்கத் தலைவிக்கு, பெண்ணொருவர் சுடுதண்ணீர் வீசியதில் காயமடைந்த சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
16ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாயிலுள்ள ஜின்னா வீதியில் வசிக்கும் சமுர்த்தி சங்கத் தலைவிக்கும் அவரது அயல் வீட்டுக்காரப் பெண்ணுக்குமிடையில், சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனை நிதி சேகரிப்புத் தொடர்பாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கத்தின் போதே, அயல் வீட்டுக்காரப் பெண், தனது வீட்டிலிருந்து சுடுதண்ணீரைக் கொண்டுவந்து, சமுர்த்தி சங்கத் தலைவிக்கு வீசியுள்ளார்.
இதன்போது காயமடைந்த சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago