Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
என்னை விபுலபுரி மக்கள் பிரதேச சபை உறுப்பினராக காரைதீவு பிரதேச சபைக்கு அனுப்பி அழகு பார்த்ததன் நம்பிக்கையை இன்று மீளவும் உறுதிப்படுத்தி, பழம்பெரும் கிராமமான காரைதீவு தன்மானத் தமிழர்களின் இருப்பை உறுதி செய்துள்ளேன் என்று தெரிவித்த மீன்சின்ன சுயேட்சை குழுவின் உறுப்பினர் சதாசிவம் சசிகுமார், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளோம் என்றார்.
காரைதீவு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதில் பக்கபலமாக நின்று செயற்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி, ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் போட்டியிட்டும் 2018 ல் இடம் பெற்ற தேர்தலின் மூலமாக சுழற்சி முறை ஆசனத்தை பெற்றுக் கொண்ட நான் கட்சி பேதம் மறந்து எமது கிராமத்தின் தனித்துவம் கருதி, எந்த வித சோரம் போதலுக்கும் இடம் கொடுக்காது 2022 ஆம் ஆண்டின் வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து நியாயத்தின் வழியில் நடந்துள்ளேன் என்றார்.
எத்தனையோ இடர்கள் ஏற்பட்ட போதும் எந்த காழ்ப்புணர்ச்சியோ பழிவாங்கும் உணர்வும் அற்று செயற்பட்டும் உள்ளேன். எனது சக உறுப்பினர் குமாரசிறி, பிழையான வழிநடத்தலின் கீழ் செயற்பட்டு தர்மத்தின் நெறி முறையியை மீறி இன்று தனி மரமாக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஊர்க்கட்டுப்பாட்டை மீறி துரோகமிழைத்துள்ளார் என்று தெரிவித்த அவர், 'தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்' என்பார்கள். எனவே எமது நோக்கமான மண்ணுக்கும் மக்களுக்கும் இறுதிவரை விசுவாசமாக நடக்கவேண்டும் என்ற சிந்தனைக்கமைவாக எமது பயணம் தொடரும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago
8 hours ago