Editorial / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இன்று (09) நடைபெற்றபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
6 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Feb 2026