Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
செஞ்சோலை படு கொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்றது.
முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது, 14.08.2006ஆம் ஆண்மு, ஓகஸ்ட் மாதம் 14ஆம் தியதியன்று, இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் 52 சிறுவர்கள் உட்பட 61 பேர் படு கொலை செய்யப்பட்டனர் என்பதுடன், 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தனர்.
இந்த நினைவு நாளையொட்டி, மட்டக்களப்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது சுடரேற்றப்பட்டு, மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மௌனப்பிராத்தினையும் இடம்பெற்றது.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago