2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை; கைதான மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி ஏ.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த மூவரையும்  ஆஜர்படுத்தியபோது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.

இவ்வாறிருக்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .