Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 29 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி ஜப்பானில் நடைபெற இருக்கும் ஜப்பான் டோக்கியோ சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் பிரான்சியா லட்சுமணர் ஜப்பான் பயணமானார்.
லண்டனில் வசிக்கும் தற்போதைய ஐக்கிய இராச்சிய உலக அழகியும் இலட்சுமணர் சாந்தி தம்பதியரின் புதல்வியுமான இவன்ஜலின், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியை பூர்வீகமாக கொண்டவர்.
ஐக்கிய இராச்சியத்தில் உலக அழகு ராணியாக 2021 22 இல் தெரிவாகிய இவன்ஜலின் அதுக்கு முன்பு பெரிய பிரித்தானியாவில் உலக இளம் அழகியாக 2017 18 இல் தெரிவானவர்.
ஜப்பானில் நடைபெற இருக்கும் அறுபதாவது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவதற்கு கடந்த திங்களன்று (28) லண்டனில் இருந்து அவர் ஜப்பான் பயணமானார் .
பிரித்தானியாவில் பல தர்மஸ்தாபனங்களை நடத்தி வரும் இவர், அதனூடாக மட்டக்களப்பு பகுதிகளிலே வீடற்ற வர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்ததோடு, காலி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago