Suganthini Ratnam / 2017 மே 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்;, 2,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்றுநோய் தடுப்புப் பிரிவு நிபுணர், டொக்டர் கே.தர்சினி தெரிவித்தார்.
டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலமானது ஆரையம்பதி, தாழங்குடாப் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. தாழங்குடா றோமன் கத்தோலிக்கப் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இம்மாவட்டத்தில் மிக வேகமாக டெங்குக் காய்ச்சல் பரவும் இடமாக மட்டக்களப்பு மாநகர சபைப் பகுதி உள்ளதுடன், மேற்படி காலப்பகுதியில் இப்பகுதியில் மாத்திரம் 825 பேர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

7 minute ago
20 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
27 minute ago
1 hours ago