Princiya Dixci / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை 9ஆம் வட்டாரத்தில் வீடு தீக்கிரையாகியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால், சனிக்கிழமை மாலை உதவி வழங்கப்பட்டது.
கடந்த 4ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கொக்கட்டிச்சோலை 9ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சீ.விஜேந்திரகுமார் என்பவரின் வீடு முற்றாக எரிந்ததினால் வீட்டிற்குள் இருந்த உடுதுணிகள் உள்ளிட்ட உடமைகள் முற்றாக எரிந்துள்ளன.
இக் குடும்பத்துக்கு உதவுமாறு கிராம சேவகர் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையிலான முனைப்பு சுவிஸ் அமைப்பின் உறுப்பினர் எம். கேதீஸ் மற்றும் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி உள்ளிட்ட குழுவினர் சேதமடைந்த வீட்டினைப் பார்வையிட்டதுடன், உடுதுணிகளைக் கொள்வனவு செய்வதற்கான நிதி நிதியுதவியை வழங்கியதுடன், பாடசாலை செல்லும் பிள்ளைக்கு சப்பாத்தும் வழங்கப்பட்டுள்ளது.
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago