2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருமணத்துக்கு திரும்பிய தந்தையும் மகளும் கைது?

Princiya Dixci   / 2017 மார்ச் 09 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான் 

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் குற்றத் தடுப்புப் பிரிவினரால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

புதுக்குடியிருப்பு - 4, ஆரையம்பதியைச் சேர்ந்த, அலையப்போடி தியாகராசா (வயது 55) அவரது மகளான தியாகராசா ஜனனி (வயது 24) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, அறியமுடிகின்றது. 

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்த இவர்கள், பிரான்ஸுக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகளுக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பிய வழியிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது. 

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .