2025 ஜூலை 16, புதன்கிழமை

திருந்த முயன்ற இளைஞன்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வரும் இளைஞன், அதிலிருந்து மீண்டு கொள்வதற்காக பொலிஸாரிடம் ஆலோசனை கேட்கச் சென்ற சம்பவமொன்று, இன்று (07) இடம்பெற்றுள்ளது. 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இளைஞன் ஒருவனே, இவ்வாறு பொலிஸாரின் உதவியை நாடிச் சென்றுள்ளார். 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள அவ்இளைஞன், அதிலிருந்து விடுபட்டு, சமூகத்தில் நற்பிரஜையாக வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

இளைஞனின் நல்லெண்ணத்தை கவனத்திற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், இளைஞனின் எதிர்கால வாழ்க்கை கருதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .