Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உயர்கல்வியை முடித்த பெண்கள், தொழில்துறையில் காணாமல் போகின்றனர்” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இன்று (08) முறைசாரா தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பான செயலமர்வில் தலைமைதாங்கி உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
“ஆண், பெண் என வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் மனித வர்க்கமாக வகைப்படுத்தப்பட்டதுடன், கௌரவமாக வாழக்கூடிய உரிமையை அவர்களுக்கு உறுதிப்படுத்தல் வேண்டும்.
“முறைசாரா தொழில்துறையில் ஈடுபடுகின்ற பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அடைவுகள் தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டிய கடற்பாடு எமக்குள்ளது.
“இலங்கையில் பெண்கள் இரு துருவங்களிடையே வாழ்கின்றமை காணக்கூடியதாகவுள்ளது.
“எனினும், சில பிரிவுகளில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ள பெண்கள் மற்றைய பிரிவுகளில் பாரம்பரியங்களால் கட்டுப்பட்டு வாழ்கின்றனர். இருப்பினும், உயர்கல்யை முடித்த பெண்கள் அதன் பின்னர் பொதுவாழ்க்கையில் குறிப்பாக தொழில்துறையில் காணாமல் போகின்றனர்.
“பெண்களின் கல்வி, பாரம்பரிய வரம்புகளால் கட்டுண்டமையால் அதன் பிரதிபலனை பெண்கள் அனுபவிக்க முடியாதிருக்கிறது.
“பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளது.
“எமது நாட்டில் நல்லிணக்க செயற்பாடானது பெண்களின் பங்களிப்பின் ஊடாக அதிக வெற்றியடைந்து வருகின்றது. பெண்கள் தொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கும் போது, மற்றும் கொள்கை தயாரிக்கும் போது குறிப்பிட்ட துறையை பிரதிநிதிதித்துவம் செய்யும் பெண்கள் சம்பந்தமாக எவ்வேளையிலும் பங்களிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முறைசாராப் பொருளாதார துறையிலுள்ள பெண்களை வலுவூட்டல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago