Niroshini / 2017 மே 13 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
உலக வங்கியினால் நடைமுறைப்பாடுத்தப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பான பங்குதாரர்களுடனான முதல் கட்டக் கலந்துரையாடல், நேற்று வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாநகர மற்றும் மேல் மாகாகண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.சுரேஸ், திட்டப் பணிப்பாளர் அனுர திசாநாயக்க, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளவென உத்தேசிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் நீர் வழங்கல், போக்குவரத்து ஒழுங்கு விதிகள், களஞ்சியப்படுத்தல் வசதிகள், சுற்றுலாத்துறை, வடிகாலமைப்பு, வீதிப்போக்குவரத்து உடப்பட பல துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
பெரிய அளவிலான அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகர், காத்தான்குடி, மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியிடம் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அந்த மாதத்திலேயே தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபரின் சிபார்சுடன் திட்ட முன்மொழிவு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய உலக வங்கியினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித்திட்டத்தினுள், மட்டக்களப்பு மாவட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது மாநகர மற்றும் மேல் மாகாகண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நேற்றைய கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகர், காத்தான்குடி, மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு ஆபிய பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் தங்களது பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் தேவைப்பாடுகள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பித்து விளக்கமளித்தனர்.
இத்திட்டமானது இலங்கையின் யாழ்ப்பாணம், கண்டி, அநுராதபுரம், திருகோணமலை, குருநாகல், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago