2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நடைபவனி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன், எம்.எம்.அஹமட் அனாம்,ஆர்.ஜெயஸ்ரீராம்

தேசிய, தேகாரோக்கிய விளையாட்டு வாரத்தையொட்டி மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புக் குழுக்களும் இணைந்து தேசிய, தேகாரோக்கிய விழிப்புணர்வு நடைபவனியை வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு நடைபவனி ஏறாவூர் நகரினூடாக செங்கலடி வரை சென்று திரும்பியது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொலிஸ் அதிகாரிகள், கிரம சேவகர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள், போக்குவரத்துப் பொலிஸார் ஆகியோர் பங்குபற்றினர்.

 வாழைச்சேனை பொலிஸார் ஏற்பாடு செய்த தொற்றா நோயிலிருந்து பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளிலான விழிப்பணர்வு பாதயாத்திரை  வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை இந்து கல்லூரி வரை இரண்டு கிலோ மீற்றர் தூரம் சென்றது.

கல்குடா பிரதேசத்தில் அரச சேவைகள் விளையாட்டு மற்றும் உடல் நல தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X