2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீராடச் சென்ற இளைஞன் மாயம்

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

நிந்தவூர் - அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்திற்கு நீராடச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் திங்கட் கிழமை (21) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது நண்பருடன் கடற்கரைப் பிரதேசத்திற்கு சென்ற குறித்த இளைஞன், மது அருந்திய நிலையில் கடலில் நீராடுவதற்காக சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கே. ஜெயஸ்ரீறில்  நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X