2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீரின்றி விவசாயிகள் பாதிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

வாகரை, கிருமிச்சை ஓடை  நீர்பாசன திட்டத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபட்டோர்களின் வேளாண்மை செய்கையில் நீர்பாச்சலின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிருமிச்சை ஓடைக் குளத்தில் போதியளவு நீர் இருந்த போதிலும் நீர் விநியோகமானது உரிய நேரத்தில் வழங்காமை, சிறந்த நீர் விநியோக முகாமைத்துவம் இல்லாத காரணத்தால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி வரண்டு காணப்படுவதாகவும் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் தமது வேளாண்மை செய்கையை கைவிட வேண்டிய நிலமை ஏற்படுமெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதான வாய்க்காலில் நீர் குறைவாக திறக்கப்படுவதால் ஏனைய வாய்க்கால்களில் ஊடாக செல்லும் நீர் விநியோகம் தடைப்படுள்ளது. 
இதனால் குறித்த வாய்க்கால்களின் மூலம் நீரைப் பெற்று வேளாண்மை செய்கைப்பண்ணப்படும் வயல் பிரதேசம் நீரின்றி வரண்டு காணப்படுகிறது.

விநியோகப்படும் நீரை பிரதான வாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள விவசாயிகள் போதியளவு பெற்றுள்ளனர். 

ஏனைய விவசாயிகளுக்கு குறித்த நீர் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடன், நீர் சென்றடையவும் இல்லையெனவும் விவசாயிகளுக்கிடையிலே முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டு குழப்ப நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். 

குறித்த காலத்தில் வழங்கப்படும் நீர் வேளாண்மையின் பருவ வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக செங்கலடி  நீர்பாசன திணைக்களம் முன்வந்து நிலைமையை சீர் செய்து விவசாயிகளை குறித்த ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேட்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X