Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு, படுவாங்கரைப் பெரு நிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட நாதனைவெளிக் கண்ட விவசாயிகள், தாம் சிறுபோக நெல் விதைத்தும், அதற்குரிய நீர்ப்பாசனம் இதுவரையில் கிடைக்காமையால் விதை நெற்பயிர்கள் வெய்யிலில் கருகிக் கொண்டு செல்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது,
போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்டதும், வெல்லாவெளி கமநல பிரதேசத்துக்குடப்பட்டதுமான நாதனைவெளிக் கண்டத்தில் 300 ஏக்கரும், கரையாக்கண்கண்டிக் கண்டத்தில் 335 ஏக்கரும், ஓட்டடிமாரி கண்டத்தில் 350 ஏக்கரும், சின்னவர் கண்ணடத்தில் 250 ஏக்கரமாக மொத்தம். 1235 ஏக்கர் நெற்பயிர்கள் உரிய நீர்ப்பாசனமின்றி கருகி வருவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் நேற்று (27) அவர்களது நீரின்றிக் கருகிப்போயுள்ள வயலில் மண்வெட்டிகளுடன் இறங்கி தமது ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த விவசாயிகளின் நெயற்கண்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நவதிரிப் பரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago