Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூரில் இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் 3 ஆயிரம் இளைஞர்கள் உட்பட சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் செயலகம் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு என்ற ஜனாதிபதியின் தூரநோக்கு இலக்கின் அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்டத்தின் அடிப்படையிலும் 'போதையற்ற கிழக்கு' எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில்; 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்; செயற்படும் இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து போதை ஒழிப்பில் ஆர்வமுள்ள 3 ஆயிரம் இளைஞர்கள் பங்குபற்றுகின்றார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago