2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறுப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கொல்ல காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்;டின் பேரில் 10 பேர்; செவ்வாய்க்கிழமை (4) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன தெரிவித்தார்.

மேற்படி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக பூஜை, மந்திரம் போன்றவற்றில் ஈடுபட்டுக்கொண்டு   சிலர் நடமாடுவதாக கிராமவாசிகளிடமிருந்து தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் அவ்வேளையில் வான் ஒன்றில் வந்த  இச்சந்தேக நபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள், வான், திறப்புகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இச்சந்தேக நபர்கள் கண்டி, மஹியங்கனை,  மினிப்பே, பண்டாரவளை,  செங்கலடி, கோப்பாவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள்  கரடியனாறுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .