2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத உணவுகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்களில் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொண்டபோது, ஆறு வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அப்பிரிவுக்குப் பொறுப்பான மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஆர்.இன்பராஜ் தெரிவித்தார்.

டின் மீன்கள், மாஜரீன்கள், முட்டைகள் மற்றும் ரொட்டிகள், சோறு போன்றவை கைப்பற்றப்பட்டன.

பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X