Princiya Dixci / 2021 மே 23 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடுப் பிரதேசத்தில் பயணக் கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் கீழ், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார், நேற்று (22) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 48 டின்கள் மற்றும் 9 போத்தல் பியர் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத வியாபாரம் தொடர்பில் இரகசியத் தகவல் கிடைத்திருந்ததாக பொறுப்பதிகாரி பி எஸ்.பி .பண்டார தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago