Princiya Dixci / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
முடக்கத்துக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 கொரோனா தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் எந்தவித மரணங்களும் இடம்பெறவில்லையெனவும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 336 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 92 சதவீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 252 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் கிளினிக் சென்றுவரும் சிறுவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறானவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் இந்தத் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago