2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புதிய படைப்புகளை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக்கண்காட்சி

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பாளர்களின் புதிய படைப்புகளை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக்கண்காட்சி, எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில், மட்டக்களப்பு, ஆரையம்பதி கோவில்குளம், உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்லூரியின் எற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகமும் இணைந்து இதனை நடத்தவுள்ளன.

இளம் தலைமுறையினரின் தொழில்நுட்வியல் கண்டுபிடிப்புகளுக்கான களத்தை அமைத்துக்கொடுக்கும் நோக்குடன், கிழக்குமாகாணத்தில் முதன் முதலாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள உயர்தொழில் நுட்கக்கல்லூரி மாணவர்களின் படைப்புகள், மட்டக்களப்பு மாவட்ட மணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், இராணவத்தினரின் படைப்புகள் என்பன காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலனின் தலைமையில் ஆரம்ப, பரிசளிப்பு   நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

முதல் நாள் நிகழ்வுகளுக்கு  மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு கட்டகளைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டபிள்யூ.எஸ்.பனன்வல உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கண்காட்சிக்கான அனுமதி இலவசம் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட முயற்சியாளர்களின் கிராமத்து உணவுப் பொருட்கள், கைத்தொழில் பொருட்களும் கண்காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X