2025 மே 07, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா. கிருஸ்ணா

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாபெரும் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (11) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, தேவநாயகம் மண்டபத்தில், ‘பிரமிக்கல்வி’ நிலையத்தின் ஏற்பாட்டில், நிலையத்தின் பணிப்பாளரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தயார்படுத்தல் ஆசிரியருமான எஸ்.எஸ் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ். முருகேசபிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்தக் கருத்தரங்கில், எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய முதலாம், இரண்டாம் பகுதி பரீட்சை நடத்தப்பட்டு, அது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X