Princiya Dixci / 2021 ஜூன் 21 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்றை, விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) இரவு முற்றுகையிட்டனர்.
இதன்போது நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், 14 கிராம் 75 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கேரளா கஞ்சா ஒரு கிராம் ஆகியன கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம், தராசு மற்றும் போதைப்பொருள் யார் யாருக்கு விற்பனை செய்தமை, அவர்களிடம் வாங்கிய பணம், வங்கியில் பணம் அனுப்பியமை, வைப்பிலிட்டமை போன்ற தரவுகள் எழுதப்பட்ட புத்தகம் உட்பட பலவற்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026