Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டட போது எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தவிட்டார்.
வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைவஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் ஐஸ் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர் என கைதான நபரின் தந்தை தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago