2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாணவி வன்புணர்வு; மாணவனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மே 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடைப் பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

இம்மாணவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போது, சந்தேகநபரான மாணவரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

மாணவன், குறித்த மாணவியைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, தனது பாட்டியிடம் விடயத்தைக் கூறியதையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாட்டியினால், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X