2025 மே 09, வெள்ளிக்கிழமை

மட்டு. அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்  திட்டங்கள் தொடர்பிலும்  கடந்த வருடத்தில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமையன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இத்திகதி மாற்றப்பட்டு நாளைமறுதினம புதன்கிழமை காலை நடைபெறுமென மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X