2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மட்டு. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட 4 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்  இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீதான  வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி  மேற்படி வேலையற்ற பட்டதாரிகள்; நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது,  மாவட்டச்  செயலகத்துக்கு முன்பாக நின்ற  பொலிஸாரையும்  மாவட்டச் செயலக அதிகாரிகளையும்; கடமையைச் செய்யவிடாது இவர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் கடந்த மார்ச் 7ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அன்றையதினம்  இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, இவர்களை தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு  மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அனுமதியளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு  இன்று (5) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .