2025 மே 07, புதன்கிழமை

மட்டக்களப்பில் செயலமர்வு

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இடங்களில் பெறப்படும் தரவுகளை சேகரித்து தரவுத் தளத்துக்கு அனுப்புவது தொடர்பில் அறிவூட்டும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது,வீதிகளின் நிலைமைகள், வீதிகளின் அருகில்அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள். வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் விளம்பரப் பலகைகளின் விபரங்கள், வீடுகள் உள்ளிட்ட ஆதனங்களின் சோலைவரி மதிப்பீடுகள் போன்ற பல்வேறு தரவுகளை குறித்த இடத்திலிருந்து கையடக்க கணினி மூலம் படம்பிடித்து குளோபல் தகவல் முறையின் மூலம் குறித்த தரவுத் தளத்துக்கு அனுப்புவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

ஆசியா பவுண்டேசனின் அனுசரணையில் நடைபெற்ற இச்செயலமர்வில் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில்,மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மாலிங்க பெர்னாண்டோ, ஆசியா பவுண்டேசன் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சி. சசிகரன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர் ஜோன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X