Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 10 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரனின் நியமனம் தொடர்பில், ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் சங்கத் தலைவர் பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்துவருவதாக அவரின் செயற்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து, மட்டக்களப்பில் சுகாதார ஊழியர்கள், இன்று (10) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள், வைத்தியர்கள், சுகாதார சிற்றூழியர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர்.
கொவிட் 19 அச்சுறுத்தலிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பணிப்பாளரைக் கேவலப்படுத்தும் வகையில், ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் கருத்து வெளியிட்டுள்ளதாக, அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
குறித்த கருத்துகளை அவர் வாபஸ்பெறவேண்டும் என்பதுடன், பணிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்புக்கோரவேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் சங்கத் தலைவரின் கருத்தானது பணிப்பாளரை நியமனம் செய்துள்ள ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்து எனவும் இது முழு சுகாதாரத் துறையையும் கேவலப்படுத்தும் கருத்து எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
22 minute ago
24 minute ago