2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் பாரிய விபத்து

Janu   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை  இடம்பெற்ற பாரிய  விபத்துச்  சம்பவத்தில்  இருவர்  பலத்த  காயங்களுக்குள்ளாகி  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி பயணித்த இரு மோட்டார்  சைக்கிள்களும் ,  ஒன்றோடு  ஒன்று  மோத்தியதாலே  இவ்விபத்து  இடம்பெற்றுள்ளதாக இதனை  நேரில்  அவதானித்தவர்கள்  தெரிவிக்கின்றனர்.

இரு  மோட்டர்   சைக்கிளிலும்   தனித்   தனியாக   பயணித்த   இருவரும்  ப லத்த  காயங்களுக்குள்ளாகிய  நிலையில்  களுவாஞ்சிகுடி  ஆதார   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு   பின்னர்  அவர்களில்  ஒருவ ர் மேலதிக  சிகிக்சைகளுக்காக  மட்டக்களப்பு  போதனா  வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிகுடி  ஆதார  வைத்தியசாலை  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இவ் விபத்துச்  சம்பவத்தில்  வேன்  மற்றும்  இரு  மோட்டார் சைக்கிள்களுக்கும்  பலத்த  சேதம்  ஏற்பட்டுள்ளன.  இந்நிலையில்  இஸ்த்தலத்திற்கு  விரைந்த  களுவாஞ்சிகுடி  பொலிஸார்  விசாரணைகளை  முன்னெடுத்து  வருகின்றனர்.

 வ.சக்தி        

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .