Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பிள்ளையாரடிப்பகுதியில் ஏற்பட்ட பாரிய திடீர் தீ யினை பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியிலுள்ள பிள்ளையாரடி சதுப்பு நிலப்பகுதியிலுள்ள பறவைகள் சரணாலய பகுதியில் இப்பாரிய தீ ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மட்டக்களப்பு மாநகர சபை,பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள காடுகளில் தீ பரவும் நிலையேற்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் விரைவாக அப்பகுதிக்கு வந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதேபோன்று படையினரும் அப்பகுதிக்கு தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்களான து.மதன், இராஜேந்திரா ஆகியோரும் இந்த தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவிகளை வழங்கினர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் உட்பட ஊழியர்களும் தீயணைக்கும் நடவடிக்கைகளில் உதவிகள் வழங்கினர்.
இந்த தீ சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago